சித்தானைக்குட்டி சுவாமி ஆலயம்

ஆலய பரிபாலன சபை


நஞ்சு ஊட்டப்பட்டும், தீயிட்டு எரித்த போதும் மீண்டும் எழுந்து நின்று சித்தாடிய சித்தர் அவர்கள் ‘1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி நிலையை எய்தினார்கள்’. இச்செய்தியினை கேள்வியுற்ற பக்த அடியார்கள் நாலா திசைகளிலிருந்தும் காரைதீவு ஆச்சிரமத்தில் ஒன்று கூடினர். ‘சித்தர் சேவா சங்கம்’ அமைக்கப்பட்டு சமாதி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

தான் சமாதியான பின் ‘தனது அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகு’மென்றும் அதன் பின்னரே சமாதி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறியிருந்தார்கள். சுவாமி அவர்கள் கூறியிருந்ததிற்கமைய மூன்றாம் நாள் அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. ஒரு யார் கன பரிமாணத்தில் குழியமைத்து நான்காம் நாள் பக்தர்களின் ஆராதனையுடன் சுவாமி அவர்கள் ‘சமாதி’ வைக்கப்பட்டார்.

பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இச்சபை வருடாவருடம் மீளமைக்கப்படுவது வழமையாகும். 1985, 1987, 1990 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தால் அன்னதானமடம், காளியம்மன், முருகன், பிள்ளையார் ஆலயங்கள் உட்பட சுற்றுமதில், அசைவுள்ள அனைத்து உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டது. தற்பொழுது இவ்வாலயம் பொதுமக்களின் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

DSCI0609

DSCI0606

ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் குரு பூசையும், அன்னதானமும் வருடந்தோரும் தமிழுக்கு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்தர தினத்தன்று பயபக்தியுடன் குருவருளால் சிறப்பாக நடைபெறுகின்றது. உள்ளுர், வெளியூர் அன்பர்கள் இத்தினத்தில் நிறைந்து காணப்படுவர். இவ்வாலயத்தில் அறநெறி வகுப்பு, வெள்ளி கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை, விசேட தினங்களில் பூசைகளும் நடைபெற்று வருகின்றது. சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்னர் ஆடிய சித்துக்கள் போல் சமாதிநிலை அடைந்த பின்னரும் இவ்விடத்தில் சித்துக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

முகப்பிற்குச் செல்ல